News July 9, 2025
திருச்சி: சிறந்த ஊராட்சிக்கு விருது – கலெக்டர்

சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதும், ரூ.1 கோடி பணமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான இந்த விருதை பெற விரும்பும் ஊராட்சிகள்,<
Similar News
News August 25, 2025
திருச்சி: பெயர்க்காரணத்தைக் கூறும் கல்வெட்டு!

திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் ‘சிரா’ என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்ததாக அக்குகையில் உள்ள 11-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. “சிரா” துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகியது என்றும்; 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திரு-சிலா-பள்ளி (புனித-பாறை-ஊர்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்தும் திருச்சிராப்பள்ளி என்ற பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
News August 25, 2025
திருச்சி: மாணவர்களுக்கு இலக்கிய திறனறி தேர்வு அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் +1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கான “தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு” வரும் அக்.11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பள்ளி தலைமையாசிரியரிடம் செப்.4-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.
News August 24, 2025
திருச்சி: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

திருச்சி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <