News April 6, 2024
பிரதமர் மோடி நடிகரை போல வலம் வருகிறார்

300 படங்களுக்கு மேல் நடித்த நான் திமுக தொண்டனாக உங்கள் முன் நிற்கிறேன். ஆனால் பிரதமர் மோடி, நடிகர் போல் வலம் வந்து கொண்டிருக்கிறார் என நடிகர் வாகை சந்திரசேகர் விமர்சித்துள்ளார். சிவகாசியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், “இந்த மக்களவை தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இதில் பாஜக வெற்றி பெற்று விட்டால், அடுத்து இந்தியாவில் தேர்தலே நடக்காது. சர்வாதிகார ஆட்சி தான் நடக்கும்” எனத் தெரிவித்தார்.
Similar News
News April 21, 2025
விடைத்தாள் திருத்தம் தொடக்கம்.. மே 19ல் 10th ரிசல்ட்

மார்ச் 28 – ஏப்.14 வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில், SSLC விடைத்தாள் திருத்தும் பணி தமிழக முழுவதும் சற்றுமுன் தொடங்கியுள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை இப்பணி நடைபெறுகிறது. வரும் 30-ம் தேதியுடன் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து, தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 19-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 21, 2025
BREAKING: தங்கம் விலை புதிய உச்சம்!

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு சவரன் ₹72,000-ஐ கடந்துள்ளது. இன்று (ஏப்.21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹9,015-க்கும், சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹72,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹111க்கும் விற்பனையாகிறது.
News April 21, 2025
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க TN அரசு டெண்டர் கோரியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை, கரூர், தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என 2024 பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக திருவண்ணாமலையில் ₹34 கோடி செலவில், மினி டைடல் பூங்கா அமையவுள்ளது. ஓராண்டில் கட்டி முடிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.