News July 9, 2025
அகமதாபாத் விமான விபத்து: முதல் கட்ட அறிக்கை தாக்கல்

அகமதாபாத் விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இக்குழுவினர் முதல் கட்ட அறிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
Similar News
News July 9, 2025
பாலபாரதி உள்ளிட்ட 300 பேர் அதிரடி கைது!

தேனி ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் Ex MLA பாலபாரதி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசுக்கு எதிராக 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் CITU, LPF உள்ளிட்டோர் ஊர்வலம் நடத்தி வருகின்றனர். உங்கள் ஊர் நிலவரம் என்ன?
News July 9, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

நேற்று மாலை ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(ஜூலை 9) சரிவுடன் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 145 புள்ளிகள் சரிந்து 83,569 புள்ளிகளிலும், நிஃப்டி 30 புள்ளிகள் சரிந்து 25,492 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Wipro, Tata Steel, ICICI Bank, HCL Tech உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சற்று சரிவைக் கண்டுள்ளன.
News July 9, 2025
மக்கள் விரோத ஆட்சியை விரட்டும் புயல் இபிஎஸ்: வானதி

தமிழகத்தில் நடந்து வருவது தேச விரோத மற்றும் மக்கள் விரோத ஆட்சி என வானதி சீனிவாசன் சாடியுள்ளார். கோவையில் பேசிய அவர், இந்த ஆட்சியில் தொழில்துறையினர் மிகுந்த வேதனையில் உள்ளதாகவும், ஓரணியில் இருந்து திமுக ஆட்சியை விரட்டுவோம் என்றார். மேலும், தமிழகத்தில் நேற்று தான் புயல் மையம் கொண்டது எனவும், இன்று சூறாவளியாக சுழன்று கொண்டிருப்பதாகவும் இபிஎஸ்-ன் சுற்றுப் பயணம் குறித்து விளக்கம் அளித்தார்.