News July 9, 2025
கோவை: பிக் பாக்கெட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முந்தினம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பின், பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது, அவரை வரவேற்க காத்திருந்த 4 பேரிடம் ரூ.2.07 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் பிக் பாக்கெட் அடித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று ராஜி, ராஜா@குண்டு ராஜன், சுரேஷ், ரமேஷ், கோபால், அருள்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News July 9, 2025
விமானப்படை வேலைக்கான தகுதிகள்(2/2)

▶️ அக்னிவீர்வாயு வீரராக விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் 02.07.2005 முதல் 02.01.2009 வரை உள்ள தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். ▶️ திருமணமாகாத ஆண், பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ▶️ 4 வருட பயிற்சி காலத்தில் திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடையாது. ▶️ ஆண்கள் 152 செ.மீ உயரம் இருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ இருக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு <
News July 9, 2025
விமானப்படையில் வேலை வேண்டுமா?

அக்னிவீர் திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டுக்கான விமானப்படை அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <
News July 9, 2025
UPSC மதிப்பீட்டுத் தேர்வு: ரூ.7,500 ஊக்கத்தொகை

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7.500 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. மதிப்பீட்டு தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் இதற்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சேர விரும்பும் நபர்கள் <