News July 9, 2025

குளித்தலை: நீதிமன்றம் எதிரே திட்டிய நபர் மீது வழக்கு

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ சிந்தலவாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 23. இவர் குளித்தலை கோர்ட் எதிரே உள்ள மெயின் ரோட்டில் பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டிருந்தார். போலீசார் எச்சரித்தும் கேட்காததால் மணிகண்டன் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News July 9, 2025

கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்

image

ரெயில்வே தண்டவாளங்கள் புதுப்பிக்கும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. இந்த பணிகள் வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16322) கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஆகஸ்ட் 31 வரை கரூர் வழியாக திண்டுக்கல் வரை மட்டுமே செல்லும். திண்டுக்கல் – நாகர்கோவில் இடையேயான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News July 9, 2025

உள்ளூர் வங்கியில் வேலை ரூ.85,000 வரை சம்பளம்

image

கரூர்: பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பதார்கள் தமிழ் மொழி பேச, எழுத மற்றும் படிக்க கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

News July 9, 2025

கிருஷ்ணராயபுரத்தில் போதை ஊசி கும்பல் சிக்கியது

image

கிருஷ்ணராயபுரம் அருகே தென்கரை வாய்க்கால் பகுதியில் 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 22), ராயனூரை சேர்ந்த ஹரிஹரன் (22), திருமாநிலையூரை சேர்ந்த நித்திஷ் (22), மணவாடியை சேர்ந்த சித்தி குமரன் (19) என்பதும் போதை ஊசி செலுத்தி போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!