News July 9, 2025

கிருஷ்ணகிரியில் சீட்டாட்டம்: 7 பேர் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை போலீசார் நாயக்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய மோகன் (28), பசுபதி (31), ஜெயக்குமார் (30), தனிஷ் (22), கார்த்திகை (27), சக்திவேல் (29), திருப்பதி (27) ஆகிய 7 பேரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News

News July 9, 2025

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? 2/2

image

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
விண்ணப்பங்களை அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் நேரில் சென்றும் பெற்றுகொள்ளலாம்.
நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News July 9, 2025

கிருஷ்ணகிரியில் அரசு வேலை 1/2

image

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், கிருஷ்ணகிரியில் மட்டும் 33 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (04343-236189)தொடர்பு கொள்ளவும். SHARE IT <<17001950>>தொடர்ச்சி<<>>

News July 9, 2025

விஷம் குடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு

image

மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சாந்தி (12) அரசு பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து சாந்திக்கு பெற்றோர் அறிவுரை வழங்கியதால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் மயங்கிய நிலையில் அவரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.

error: Content is protected !!