News July 8, 2025
கடலூர் விபத்து: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். ரயில் விபத்தில் உயிரிழந்த சுப்ரமணியபுரம் பகுதியைச் சார்ந்த திராவிடமணி என்பவரது மகள் சாருமதி மற்றும் அவரது மகன் செழியன் ஆகியோரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கண்ணீர் மல்க கலந்து கொண்டனர்.
Similar News
News July 9, 2025
கடலூர்: ரயில்வே கேட் கீப்பருக்கு சிறை

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் நேற்று (ஜூலை 08) காலை தண்டவாளத்தை கடந்த பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் மோதி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை நேற்று கைது செய்த போலீசார், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News July 9, 2025
கடலூர்: விபத்தில் பறிபோன 3 உயிர்கள்

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று (ஜூலை 8) செவ்வாய்க்கிழமை நான் எங்க போட்டோ காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவி சாருமதி, மாணவர்கள் செழியன் (15) மற்றும் நிமலேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்தவர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News July 8, 2025
கடலூர்: வேலை வேண்டுமா? இந்த கோயிலுக்கு போங்க

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள நகராமலை கிராமத்தில் அகஸ்திய மகரிஷி பூஜை செய்த, சிறப்பு வாய்ந்த கோயிலாக கருதப்படும் அகஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷ தினத்தில் பிரார்த்தனை செய்தால் தங்களது மனதுக்கு பிடித்த வேலை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு பகிரவும்.