News July 8, 2025
தோஷம் நீக்கும் நாமக்கல் கைலாசநாதர் கோயில்!

நாமக்கல்: ராசிபுரத்தில் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் வல்வில் ஓரி மன்னன் கொல்லிமலையை தலைநகராக கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்தபோது அவரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது. இங்கு வேண்டிக்கொள்ள கலைகளில் சிறப்பிடம் பெறலாம், அம்பாளை வணங்கிட புத்திரதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. SHARE IT!
Similar News
News August 25, 2025
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

ஆலாம்பாளையத்தில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, போதை மாத்திரைகளை விற்றுவந்த 2 இளைஞர்களை போலீசார் இன்று கைது செய்தனர். சந்திரசேகரன் (26), பிரகாஷ் (27) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. 50,000 மதிப்புள்ள 192 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். இந்த இளைஞர்கள் பள்ளிபாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்களைக் குறிவைத்து போதை மாத்திரைகளை விற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
News August 24, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.24 ) நாமக்கல் – லட்சுமணதாஸ் (9443286911 ), ராசிபுரம் – நடராஜன் ( 9442242611), திருச்செங்கோடு – சுதா ( 9498103660), வேலூர் – கெங்காதரன் ( 6380673283) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 24, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து நாளை (திங்கள்கிழமை) 25/8/2025 அதிகாலை 4:20 மணிக்கு ஓசூர், பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்ல 07356 ஹூப்ளி – ஹூப்ளி ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயனடையலாம். நாமக்கல் மக்கள் முன்பதிவு செய்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.