News July 8, 2025

தென்காசியில் மனுநீதி நாள் முகாம் – ஆட்சியர் பங்கேற்பு

image

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட மருதம் கிணறு கிராமத்தில் வருகிற ஜூலை.09 காலை 11 மணியளவில் நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்து கொள்ள உள்ளார். மருதம் கிணறு கிராமத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Similar News

News August 24, 2025

இன்றைய இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகள்

image

தென்காசி மாவட்டத்தில் இன்றிரவு (ஆக.24) முதல் நாளை காலை 6 மணி வரை உட்கோட்ட வாரியாக ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களுடைய கைபேசி எண்ணுடன் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்மந்தபட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம், மேலும் நேரடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டு உள்ளது.

News August 24, 2025

தென்காசி: அரசு பேருந்து விபத்து & 25 பேர் காயம்

image

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சிங்கிலிபட்டி பாலத்தில் அரசு பேருந்து, கார், இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. பேருந்து புளியமரத்தில் மோதிய விபத்தில், 23 பயணிகள் உட்பட 25 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் புளியங்குடி, தென்காசி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். சொக்கம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 24, 2025

தென்காசி: டிகிரி போதும்! ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

தென்காசி மக்களே; வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) தமிழகத்தில் 894 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு 20 – 28 வயதிற்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணபிக்க இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவர்களுக்கு Rs.24,050 – 64,480 வரை சம்பளம் வழங்கப்படும்; விண்ணப்பிக்க கடைசி நாள் 28.08.25. *ஷேர் செய்தால் பிறருக்கும் உதவும்.

error: Content is protected !!