News April 5, 2024

கடலூர் தொகுதி வேட்பாளர் வாகனம் சோதனை

image

கடலூர் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இவர் கடலூர் மாவட்டத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு காரில் வந்த போது தேர்தல் பறக்கும் படை குழுவினர் விஷ்ணு பிரசாத் காரை சோதனை செய்தனர். இந்த சோதனையில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 6, 2025

கடலூர்: பேருந்து முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை

image

பாளையங்கோட்டை பொட்டக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை ராஜன் (27). இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக ஒருவரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட்டதாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்தவர் பாளையங்கோட்டையில் அரசு பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News November 6, 2025

கடலூர்: அரசு வாங்கித் தருவதாகக் கூறி மோசடி!

image

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மழவராயநல்லூரைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (37). இவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு சிதம்பரத்தைச் சேர்ந்த தீபக் (41) என்பவர் ரூ.13 லட்சம் பெற்றுள்ளார். அதன் பிறகு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக்கை நேற்று கைது செய்துள்ளனர்.

News November 6, 2025

கடலூர்: தேர்வு இல்லை-அரசு வேலை!

image

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.

1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK<<>> செய்க
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!