News July 8, 2025
நான் அந்த மாதிரி பெண் இல்லை: சம்யுக்தா

தோழியின் திருமணத்துக்குச் சென்ற சம்யுக்தா ஹெக்டே, மணமேடையிலேயே மணப்பெண்ணுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்தார். இதுதொடர்பான போட்டோஸ் வைரலாகவே, ‘நீங்கள் தன்பாலின ஈர்ப்பாளரா?’ என நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், தான் அந்த மாதிரி பெண் இல்லை என சம்யுக்தா பதிலளித்துள்ளார். மேலும், இந்த முத்தத்துக்குப் பின்னால் அளவு கடந்த அன்பும், நட்பும் மட்டுமே உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
நாளை ‘பாரத் பந்த்’ ஏன்?

நாளை நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில், வங்கி, இன்ஷூரன்ஸ், போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 10-க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்களிப்பர் எனக் கூறப்படுகிறது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவாசயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கண்டித்தும், சிறந்த பணிப் பாதுகாப்பு, சம்பளம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை கோரியும் இந்த பந்த் நடைபெறுகிறது.
News July 9, 2025
ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஒன்லிஃபேன்ஸ்

பணியாளருக்கு ஈடான வருமானத்தை ஈட்டுவதில் டெக் ஜெயண்ட் நிறுவனங்களான ஆப்பிள், NVIDIA நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி ஆபாச சோஷியல் மீடியா தளமான ஒன்லிஃபேன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. ஒன்லிஃபேன்ஸ், ஒரு பணியாளருக்கு $37.6 மில்லியன் டாலர் என்ற அளவில் வருமானம் ஈட்டுகிறது. வால்வ் ($19M), யூட்யூப் ($7.6M), NVIDIA ($3.6M), இன்ஸ்டாகிராம் ($2.5M), ஆப்பிள் ($2.4M) மெட்டா ($2M) வருமானம் ஈட்டுகின்றன.
News July 9, 2025
நாளை வழக்கம்போல பஸ்கள் ஓடும்: சிவசங்கர்

நாளை(ஜூலை 9) தமிழகத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். <<16987412>>மத்திய அரசை கண்டித்து<<>> நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் நாளை பஸ்கள் வழக்கம் போல் தமிழகத்தில் இயங்குமா என மக்களுக்கு பெரும் கேள்வி எழுந்தது. ஆனால் அதில் பாதிப்பு இருக்காது என அமைச்சரே விளக்கம் அளித்துள்ளார்.