News July 8, 2025
பஞ்சபட்டியில் பைக் – லாரி மோதிய விபத்தில் தம்பதியர் பலி

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பஞ்சப்பட்டியை சேர்ந்த ரமேஷ், (42) அவரது மனைவி கல்பனா (31). இவர்கள் இருவரும் நேற்று பைக்கில் குஜிலியம்பாறை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மோளப்பட்டி அருகே வந்த லாரி, பைக் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டநிலையில்சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 24, 2025
தக்காளி விலை திடீர் உயர்வு

கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது: தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி, பூக்கள் உதிர்ந்து விட்டன. இதனால்,கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே தக்காளி வரத்தாகிறது. கடந்த மாதம் கிலோ, 40 ரூபாய் வரை விற்ற ஒரு கிலோ பெரிய ரக தக்காளி தற்போது, 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. சிறிய அளவிலான தக்காளி, 30 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாக உயர்ந்துள்ளது.
News August 23, 2025
கரூர்: கணவன் அடித்தால்! உடனே CALL

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கரூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9150368751-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News August 23, 2025
கரூர்: இளைஞர்களுக்கு இலவச ட்ரோன் பயிற்சி

கரூர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் தாட்கோ நிறுவனத்தின் மூலம், இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட 4 பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சி காலத்தில் சீருடை, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் இங்கு <