News July 8, 2025
கடலூர்: ரயில்வே கேட் கீப்பர் பணியிடை நீக்கம்

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தை நேரில் கண்டவர்கள் ரயில்வே கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதால் தான் விபத்து நடந்ததாக கூறி, தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக வடமாநிலத்தை சேர்ந்த கேட் கீப்பரை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
விபத்து தொடர்பாக மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்

கடலூர், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் தற்போது மன்னிப்பு கோரியுள்ளது.
News July 8, 2025
கடலூர் ஆட்சியர் மீது தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் இன்று (ஜூலை.8) காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ‘செம்மங்குப்பத்தில் சுரங்கப்பாதை அமைக்க கடந்த ஒரு வருடமாக ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை’ என தெற்கு ரயில்வே நிர்வாகம் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
News July 8, 2025
கடலூர் ரயில் விபத்து: ரயில்வே சார்பில் நிவாரணம்

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்த மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.