News April 5, 2024
அதிமுக, தமிழகத்தை அடகு வைத்தவர் இபிஎஸ்

எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் தமிழகத்தை பாஜகவால் கைப்பற்ற முடியாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் பிரசாரத்தில் பேசிய அவர், அதிமுகவை மட்டுமின்றி தமிழகத்தின் உரிமைகளையும் பாஜகவிடம் அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி என குற்றம்சாட்டினார். மேலும், பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ்ஸின் நாடகம் தமிழக மக்களிடம் ஒருபோதும் எடுபடாது எனவும் அவர் கூறினார்.
Similar News
News April 21, 2025
விடைத்தாள் திருத்தம் தொடக்கம்.. மே 19ல் 10th ரிசல்ட்

மார்ச் 28 – ஏப்.14 வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில், SSLC விடைத்தாள் திருத்தும் பணி தமிழக முழுவதும் சற்றுமுன் தொடங்கியுள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை இப்பணி நடைபெறுகிறது. வரும் 30-ம் தேதியுடன் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து, தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 19-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 21, 2025
BREAKING: தங்கம் விலை புதிய உச்சம்!

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு சவரன் ₹72,000-ஐ கடந்துள்ளது. இன்று (ஏப்.21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹9,015-க்கும், சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹72,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹111க்கும் விற்பனையாகிறது.
News April 21, 2025
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க TN அரசு டெண்டர் கோரியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை, கரூர், தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என 2024 பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக திருவண்ணாமலையில் ₹34 கோடி செலவில், மினி டைடல் பூங்கா அமையவுள்ளது. ஓராண்டில் கட்டி முடிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.