News July 8, 2025

அரசு பள்ளிக்கு விருது வழங்கிய அமைச்சர்

image

கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு உள்ளிட்ட அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது. இதனால் தமிழ்நாடு அரசு மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப்பள்ளிக்கான பிரிவில் அறிஞர்அண்ணா தலைமைத்துவ விருதினையும், பரிசுத் தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினையும் அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். ஷேர் பண்ணுங்க

Similar News

News July 8, 2025

கிருஷ்ணகிரியில் மான் கறி வைத்திருந்த இருவருக்கு அபராதம்

image

அஞ்செட்டி வனத்துறையினர் பூ மரத்துக்குழி பகுதியில் நேற்று (ஜூலை 7) இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சித்தாண்டபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (27) மற்றும் பிலிகுண்டுவை சேர்ந்த ஜாக்சன் (37) ஆகிய இருவரை வனத்துறை விசாரித்ததில் அவர்கள் இருவரும் 8 கிலோ மான் கறியை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து இருவருக்கும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News July 8, 2025

ஓலாவில் வேலை வாங்குவதாக கூறி மோசடி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலியான பணியாணை வழங்கி 56 நபர்களிடம், ரூ.22 லட்சம் மோசடி செய்த மனோ, சதீஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆணைகளுடன் ஓலாவுக்கு வேலைக்கு சென்றபோது, அந்தப் பணி ஆணையை நாங்கள் தரவில்லை என நிறுவனத்தில் கூற, இம்மோசடி அம்பலமானது.

News July 8, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பணிகள் குறித்து கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் வரும் 15.07.2025 முதல் நடைபெறவுள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தலைமையில் இன்று (08.07.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் உள்ளனர்.

error: Content is protected !!