News April 5, 2024
அடிப்படை வசதி இல்லை என்று கேட்டதற்கு அடி உதை

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள ஏந்தல் கிராமத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்க சென்ற போது அடிப்படை வசதி ஏதும் செய்து தரவில்லை என கேள்வி கேட்ட இளைஞரை திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் முருகேசன் மற்றும் மகன் ஆகியோர் தாக்கியதால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News April 13, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என 100— டயல் செய்யலாம்.
News April 13, 2025
நினைத்தை நிறைவேற்றும் திருக்கோவிலூர் ஆலயம்

நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் திருக்கோவிலூர் ஸ்ரீ வீரட்டேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் நன்மை உண்டாகும். இதுவரை வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி நினைத்த காரியத்தை செய்து முடிக்க முடியும். இந்த புத்தாண்டிற்கு தேவாரம் பாடப்பெற்ற திருக்கோவிலூர் சென்று வாருங்கள். ஷேர் பண்ணுங்க
News April 13, 2025
பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க