News April 5, 2024

தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

image

ஸ்பா சென்டர்களில் ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும்தான் மசாஜ் செய்ய வேண்டும் என்று உத்தரவிடக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தொழில்முறையில் மசாஜ் செய்பவர்கள் பாலின பாகுபாடு பார்க்காமல் பணியில் ஈடுபடுவதுதான் வழக்கம். ஆனால், அதனை வேறு நோக்குடன் பார்த்த மனுதாரருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

Similar News

News January 29, 2026

பிப்.3-ல் கூட்டணி பற்றி அறிவிப்பு: பிரேமலதா

image

இதுவரை கூட்டணி முடிவை அறிவிக்காத தேமுதிக, NDA கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சென்னையில் பிப்.3-ம் தேதி கூட்டணி குறித்து அறிவிப்பேன் என்று பிரேமலதா உறுதிபடத் தெரிவித்துள்ளார். அதேநேரம், தமிழகத்தில் உள்ள கட்சிகளுடனும், மத்திய அரசுடனும் தேமுதிக நல்ல நட்புறவுடன் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கலாம்?

News January 29, 2026

AK-வை சந்தித்த MADDY (PHOTOS)

image

கார் ரேஸிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் அஜித்குமாரை, தமிழ் திரையுலகினர் பலரும் ரேஸிங் களத்தில் சந்தித்து வருகின்றனர். தற்போது துபாயில் உள்ள அஜித்தை, நடிகர் மாதவன் சந்தித்துள்ளார். ஏற்கெனவே, கடந்த ஆண்டும் துபாயில் இருந்த போது, அஜித்தை மாதவன் நேரில் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘F1’ படத்தை, இவர்களை வைத்து யாராவது ரீமேக் பண்ணுங்களேன் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News January 29, 2026

2015-ல் வந்தது செயற்கை வெள்ளம்: CM ஸ்டாலின்

image

சென்னை பெருநகரில், ₹6,495 கோடியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் சென்னையில் 2015-ல் செயற்கை வெள்ளம் உருவாக்கப்பட்டதாக கூறிய அவர், தற்போது இயற்கை எவ்வளவு மழை தந்தாலும் சமாளிக்கும் ஆற்றலை சென்னைக்கு உருவாக்கி உள்ளோம் என்றார். மேலும், மக்களின் தேவையை புரிந்துகொண்டு மெட்ரோ வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது திமுக அரசுதான் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!