News July 8, 2025
தேன்கனிக்கோட்டை பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்

தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 10 வயதுடைய 5-ம் வகுப்பு மாணவி பள்ளி தலைமை ஆசிரியர் சாரதி, தன்னை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரை கைது செய்தனர்.
Similar News
News August 23, 2025
கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (ஆக.22) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, இழப்பீட்டு மானியத் தொகையை வரும் 15 நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
News August 23, 2025
கிருஷ்ணகிரியில் நாளை மரபுச் சந்தை

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் 181-வது மரபுச் சந்தை, நாளை (ஆக.24) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூலக மைதானத்தில் நடைபெற உள்ளது. இச்சந்தையில் பாரம்பரிய அரிசி வகைகள், பசு நெய், தேன், ஊறுகாய், தின்பண்டங்கள் மற்றும் ரசாயனமில்லா காய்கறிகள் உள்ளிட்டவை கிடைக்கும். இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
News August 23, 2025
போச்சம்பள்ளியில் இலவச மருத்துவ முகாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிகரம் அரிமா சங்கம் மற்றும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் இருதய மருத்துவமனை இணைந்து, நாளை (ஆக.24) இலவச இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை முகாமை நடத்துகின்றன. அரசம்பட்டி ஏ.கே.ஜி. திருமண மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் இம்முகாமில், சர்க்கரை மற்றும் இருதயப் பரிசோதனைகள் இலவசமாகச் செய்யப்படுகின்றன. SHARE பண்ணுங்க.