News July 8, 2025
செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு

தமிழக அரசு “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலி மூலம் போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்த தகவல்களை பொதுமக்கள் தங்கள் சுயவிவரங்களை வெளியிடாமல் தெரிவிக்கலாம். மேலும், போதைப்பொருள் விற்பனையாளர்கள் குறித்து புகார் அளிக்க 10581 என்ற அமலாக்கப்பிரிவு உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 23, 2025
செங்கை பேருந்து நிலையத்தில் பார்க்கிங் அடிக்கல் நாட்டு விழா

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே, கலைஞர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹3.58 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. 9,200 சதுர அடியில் அமையவுள்ள இந்த வளாகத்தில், தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல் தளத்தில் 16 கடைகள் இடம்பெறும். நேற்று (ஆகஸ்ட் 22) நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், அமைச்சர் தா. மோ. அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.
News August 23, 2025
செங்கை பேருந்து நிலையத்தில் பார்க்கிங் அடிக்கல் நாட்டு விழா

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே, கலைஞர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹3.58 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. 9,200 சதுர அடியில் அமையவுள்ள இந்த வளாகத்தில், தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல் தளத்தில் 16 கடைகள் இடம்பெறும். இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், அமைச்சர் தா. மோ. அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.
News August 22, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 22) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.