News July 8, 2025

திண்டுக்கல் கலெக்டர் தலைமையில் சிறப்பு முகாம்!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் பாதுகாப்பு படைவீரர்களுக்கான ஸ்பார்ஷ் (SPARSH) ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் தலைமையில் இன்று (07.07.2025) நடைபெற்றது. கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News

News August 23, 2025

திண்டுக்கல்: தகாத உறவால் கணவன் தற்கொலை!

image

திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள தனியார் பங்களாவில் மேற்பார்வையாளராக பணிபுரிந்தவர் ஜான்சன் பாபு(36). இவருக்கும் சசிரேகா என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 6 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், சசிரேகாவிற்கும் மற்றொரு வாலிபருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனால் இந்தத் தம்பதி விவகாரத்திற்கு மனு செய்த நிலையில் நேற்று முந்தினர் ஜான்சன் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News August 23, 2025

திண்டுக்கல்லில் மாபெரும் மாரத்தான் போட்டி

image

திண்டுக்கல்லில் இன்று(ஆக.23) காலை 6 மணிக்கு மாரத்தான் போட்டி தொடங்கியது. டட்லி பள்ளி மைதானம் மற்றும் அங்கு விலாஸ் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ. 4000, மூன்றாம் பரிசு ரூ.3000, நான்காம் பரிசு ரூ.2000, ஐந்தாம் பரிசு ரூ.1000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

News August 23, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (ஆகஸ்ட் 22) இரவு 11 மணி முதல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறை வெளியிட்ட தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!