News July 8, 2025
தவாக நிர்வாகி கொலை வழக்கில் 11 பேர் சரணடைந்துள்ளனர்

செம்பனார்கோயில் அருகே தவாக நிர்வாகி மணிமாறனை வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அறிவாளால் வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் வீரமணி குணசேகரன் முருகன் உள்ளிட்ட 4 பேர் பாலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மேலும் 7 பேர் வளவனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
Similar News
News August 23, 2025
மயிலாடுதுறை மாவட்டம் பற்றி சுவாரசிய தகவல்கள்

➡️ தமிழகத்தில் கலைகளில் முதன்மை மாவட்டம்
➡️மொத்த மக்கள் தொகை: 9,18,356
➡️மொத்த பரப்பளவு: 1,169.3 ச.கி.மீ
➡️வருவாய் கிராமங்கள்: 287
➡️முற்கால பெயர்கள்: மாயூரம் மற்றும் மாயவரம்
➡️அஞ்சல்: 2
➡️கல்லூரி/பல்கலைக்கழகம்: 6
➡️மருத்துவமனைகள்: 7
➡️காவல் நிலையங்கள்: 11
➡️விவசாயத்தையும் மீன்பிடி தொழிலையும் சரிசமமாக கொண்டுள்ள மாவட்டம் நம் மயிலாடுதுறை ஆகும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 23, 2025
காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கு மரியாதை

சீர்காழி காவல் சரகம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு கட்டை பையில் ஒரு கைபேசி மற்றும் ரூ.5,100 பணமும் கிடந்துள்ளது. இதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் காமராஜ் என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காணாமல் போன பொருள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு சீர்காழி காவல் நிலையம் சார்பாக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.