News July 8, 2025

பெரம்பலூர் : மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (ஜூலை 7) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கையை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் பெற்றுக்கொண்டார். இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மின்னணு குடும்ப அட்டை பயனாளிகளுக்கு வழங்கினார்.

Similar News

News August 23, 2025

பெரம்பலூர்: கம்பீரமாக நிற்கும் ரஞ்சன்குடி கோட்டை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ரஞ்சன்குடி கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டை 1600 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னன் வம்சம் வந்த தூங்கானை மறவன் அரசன் கட்டியது. இவருக்கு பின் பல அரசர்கள் இக்கோட்டையில் இருந்து ஆட்சிபுரிந்தனர். பின்னர் இந்த கோட்டையை ஆற்காடு நவாப் கைப்பற்றினார். 1751-ல் வால்கண்டா போரில் இறந்தவர்கள் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டனர். இப்படி பல மன்னர்களை கண்ட கோட்டை இன்றும் கம்பீரமாக நிற்கிறது.

News August 23, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியில், பணிபுரிய தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை Perambalur.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு வருகிற (5.9.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 23, 2025

புதிய பல்நோக்கு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ

image

ஆலத்தூர் ஒன்றியம், புது விராலிப்பட்டி கிராமத்தில் (ஆகஸ்ட் 22) பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு கட்டடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அடிக்கல் நாட்டினார். இதில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வல்லபன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!