News July 8, 2025
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரும் ஜூலை 15ல் தொடங்கப்பட உள்ளது. இதில், ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரையில் நாகை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் 97 முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாமில் 15 துறையைச் சேர்ந்த 46 வகையான சேவைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 23, 2025
நாகைக்கு 1050 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு சென்னை, பெங்களூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு பயணிகள் <
News August 22, 2025
நாகையில் ஃபாஸ்ட் ஃபுட் தயாரிக்க இலவச பயிற்சி!

நாகை ஐஒபி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் ஃபாஸ்ட் ஃபுட் தயாரிக்க இலவச பயிற்சி வருகிற ஆக.28ம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது. 12 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் தொடங்க வங்கி கடனுதவி ஏற்பாடு செய்யப்படும். முன்பதிவிற்கு 6374005365 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். SHARE IT!
News August 22, 2025
நாகையில் அப்பா அம்மா மகனுக்கு ஆயுள் தண்டனை

நாகை மாவட்டம் முட்டம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம், மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர், அதே பகுதியை சேர்ந்த நரசிங்கமூர்த்தி என்பவரை கடந்த 2022ல் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கில் நாகை மாவட்ட நீதிபதி கந்தகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது பரமசிவம், பாக்கியவதி, மகாதேவன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.