News July 8, 2025
தரவரிசை பட்டியலில் திருச்சி ஏர்போர்ட் முதலிடம்

சர்வதேச விமான நிலைய கவுன்சிலிங்கான ஏசிஐ, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அடங்கியுள்ள பசிபிக் பகுதிகளில் திருச்சி விமான நிலையம் 4.94 புள்ளிகள் பெற்று சர்வதேச அளவில் 54-வது இடமும், இந்திய அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.
Similar News
News August 23, 2025
திருச்சி என்.ஐ.டி – இல் வேலை வாய்ப்பு

திருச்சி என்.ஐ.டி எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ மற்றும் ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு வரும் 26ஆம் தேதி நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் www.nitt.edu என்ற தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அசல் சான்றிதழ்களை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 23, 2025
திருச்சி: இலவச தையல் இயந்திரம் பெற அழைப்பு

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பல்வேறு வகையான குறைபாடு உடைய மாற்றத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது தேசிய அடையாள அட்டையுடன் <
News August 23, 2025
திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் 2 நாட்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து நாகூர் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.