News July 7, 2025
2001 தேர்தலை மறந்தாச்சா? திமுகவுக்கு EPS கேள்வி

பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, பழைய சம்பவம் மறந்துவிட்டதா எனக் கேட்டுள்ளார் இபிஎஸ். 1991-ல் பாஜகவோடு கூட்டணி வைத்தீர்களா இல்லையா? 2001 தேர்தலில் கூட்டணி வைத்தீர்களா இல்லையா? நீங்கள் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி. நாங்கள் கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா? என்றதுடன், நாட்டுக்கு நல்ல திட்டங்கள் தரும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News July 8, 2025
‘அயோத்தி’ தெலுங்கு ரீமேக்.. ஹீரோ யார் தெரியுமா?

சசிகுமார் நடிப்பில் பெரும் வெற்றிப் பெற்ற அயோத்தி படம் தெலுங்கில் ரீமேக் ஆவதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ஆக்ஷன் ஹீரோ நாகர்ஜூனா இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகமாக ஆக்ஷன், மசாலா கலந்து கமர்சியல் படங்களை அதிகம் விரும்பும் தெலுங்கு ஆடியன்ஸ் எதார்த்தமாக எடுக்கப்பட்ட அயோத்தி படத்தை ஏற்றுக் கொள்வார்களா?
News July 8, 2025
பதவி விலக முதல்வர் உத்தரவு.. உடனே செய்த 4 தலைவர்கள்!

மதுரை மாநகராட்சியில் மண்டல தலைவர்கள் தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு சொத்து வரியை குறைத்து காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு சென்ற நிலையில், உடனடியாக மாநகராட்சியின் மண்டலத் தலைவர்களை ராஜினாமா செய்ய நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில், மண்டலத் தலைவர்கள் பாண்டிசெல்வி, சரவண புவனேஸ்வரி, சுவிதா, முருகேஷ் சர்மா ஆகியோர் தற்போது ராஜினாமா செய்துள்ளனர்.
News July 8, 2025
கவுண்டி சாம்பியன்ஸ் லீக்கில் தமிழக வீரர்

2025 IPL சீசனில் குஜராத் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் சாய் கிஷோர். இவரை Surrey அணி கவுண்டி சாம்பியன்ஷிப் லீக்கின் 2 போட்டிகளுக்காக எடுத்துள்ளது. இந்த குறுகியகால ஒப்பந்தத்தின்படி, Yorkshire & Durham ஆகியவற்றுக்கு எதிராக விளையாடவுள்ளார். Yorkshire அணியில் CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் இடம்பெற்றுள்ளார். மேலும், தான் Surrey அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி அடைவதாக ருதுராஜ் தெரிவித்துள்ளார்.