News July 7, 2025
மீண்டும் போர் மூளுமா?

இஸ்ரேல் – ஈரான் போர் சற்றே ஓய்ந்துள்ள நிலையில், நேற்றிரவு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஏமனின் ஹூதி கிளர்ச்சிப் படை. இதையடுத்து ஏமனின் துறைமுகங்கள், மின்னுற்பத்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியது. இதற்கு பதிலடியாக, மீண்டும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஹூதி நடத்தியுள்ளது. காஸாவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், மீண்டும் மோதல்கள் நடப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News July 8, 2025
நாடு முழுவதும் நாளை பந்த் அறிவிப்பு!

மத்திய அரசை கண்டித்து நாளை(ஜூலை 9) நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளன. ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பஸ், ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை பஸ்கள் இயக்கத்தில் பாதிப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
News July 8, 2025
ஜூலை 8… வரலாற்றில் இன்று!

*1099 – 1-ம் சிலுவைப் போர். 15,000 கிறித்தவ வீரர்கள் பட்டினியுடன் ஜெருசலேமை முற்றுகையிட்டனர் *1497 – வாஸ்கோ டோகாமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் ஆரம்பித்தது *1947 – அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் ஒன்று நியூ மெக்சிகோவில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது * 1972: இந்திய Ex. கேப்டன் கங்குலியின் பிறந்தநாள் *2003 – சூடான் விமானம் விபத்துக்குள்ளானதில் 117 பேர் உயிரிழந்தனர்.
News July 8, 2025
இந்திய பொருள்களுக்கு வரி.. அவகாசத்தை நீட்டித்த டிரம்ப்

USA-வில் இந்தியப் பொருள்களுக்கு வரும் நாளை முதல் 27% வரி விதிப்பு அமலாகும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான புதிய இறக்குமதி வரி விதிப்பு ஆக.1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், விலை உயர்வு, சந்தை பாதிப்பு அச்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.