News July 7, 2025
ஈரோடு: சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்

ஈரோடு அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுவன், கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு கடித்து, சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சிறுவனுக்கு பாம்பு விஷமுறிவு மருந்து 20 பாட்டில்கள் செலுத்தி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் 72 மணி நேரத்திற்கு பின் சிறுவனுக்கு நினைவு திரும்பியது. சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்களை, சிறுவனின் பெற்றோர் பாராட்டினர்.
Similar News
News July 9, 2025
ஈரோட்டில் நாளை இங்கெல்லாம் மின்தடை

ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் நாளை மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக ▶️பெரும்பள்ளம் மற்றும் வரதம்பாளையம் துணை மின் நிலையம் ▶️மாக்கினாங்கோம்பை மற்றும் காவிலிபாளையம் துணை மின் நிலையம் ▶️கணபதிபாளையம் மற்றும் கவுந்தப்பாடி துணை மின்நிலையம்▶️பெரியகொடிவேரி துணை மின்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை(ஜூலை 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. ஷேர் செய்யுங்கள்.
News July 9, 2025
பவானிசாகர் கறிக்கடைக்காரர் வெட்டி படுகொலை

பவானிசாகர் அருகே பெரிய கள்ளிப்பட்டி முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது வீட்டின் அருகே வசிக்கும் வெள்ளிங்கிரி என்பவருக்கும் முருகேசனுகும் பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை முருகேசன் வீட்டிலிருந்த போது அறிவாளை எடுத்து வந்து வெள்ளிங்கிரி முருகேசன் விரட்டி வெட்டி படுகொலை செய்தார். பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 8, 2025
ஈரோட்டில் மக்களுடன் ஸ்டாலின் முகாம் தொடக்கம்

சட்டபேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பின்படி, அனைத்து நகர்ப்புற, ஊரக பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் வரும் 15.7.25 அன்று வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைக்கிறார். ஜூலை 15 முதல் நவம்பர் வரை அனைத்து வட்டங்களிலும் 10,000 சிறப்பு முகாம்கள் நடைபெறும்.