News July 7, 2025
நயன்தாரா ஆவணப்படத்திற்கு மீண்டும் சிக்கல்

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக தனுஷ் ₹10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழங்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகளை அதில் பயன்படுத்தியதாக ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட் வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளது.
Similar News
News September 9, 2025
மீண்டும் மறுப்பு.. நீதிமன்றத்தை நாடும் தவெக?

தனது பிரசார பயணத்தை திருச்சியில் இருந்து துவங்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். இதற்காக போலீஸாரிடம் அனுமதி கேட்கப்பட்டு வருகிறது. ஆனால், பிரசார இடத்தை மாற்ற வேண்டும், பேசும் நேரத்தை குறைக்க வேண்டும், மாற்று சாலைகளில் ரோடு ஷோ செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதாம். இந்நிலையில், இது அரசியல் உள்நோக்கோடு கூறப்படுவதாக கருதும் தவெக, நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News September 9, 2025
தோனியின் ஒன் லைன் மந்திரம் இதுதான்

சர்வதேச போட்டிகளில் இருந்து எப்போதோ ஓய்வு பெற்றாலும், தோனியின் விளையாட்டு நுட்பங்கள் இன்றுவரை பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், CSK வீரர் நூர் அகமது தோனி பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். ‘சூழ்நிலையை அறிந்துகொண்டு, அதற்கு தேவையானதைச் செய்’ என்றே தோனி அறிவுறுத்துவார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், IPL-ல் ஆட்ட நாயகன் விருது வென்றதை விட MSD-ன் கீழ் விளையாடியதே சிறந்தது என்றார்.
News September 9, 2025
விலை குறைப்பு.. அரசு புதிய அறிவிப்பு

GST குறைப்பால் கார், டூ வீலர் உள்ளிட்டவை எவ்வளவு விலை குறைகிறது என கடைகளின் முன் விலை பட்டியலை விளம்பரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. PM மோடியின் போட்டோவுடன் இந்த விளம்பரங்கள் இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. விலை குறித்து மக்கள் அறிய வேண்டும் என்ற நல்ல நோக்கம் இருந்தாலும், PM மோடியின் படம் இருக்க வேண்டும் என்பது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?