News July 7, 2025

மயிலாடுதுறை: குழந்தை பேறு அருளும் திருவலங்காடு திருத்தலம்

image

மயிலாடுதுறை, திருவாலங்காடு கிரமத்தில் வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் தனிச்சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். நீண்ட நாள் குழந்தைபேறு வேண்டுவோர் அமாவாசையில் இங்கு சென்று புனித நீராடி புத்திரகாமேஸ்வரர் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சேர் பண்ணுங்க.!

Similar News

News July 8, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்வு எழுதும் 15,880 பேர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 12.7.2025 சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 52 தேர்வு கூடங்களில் மொத்தம் 15880 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு எழுதுபவர்களுக்கு பேருந்து வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

வரலாற்று சிறப்புடைய மயிலாடுதுறை

image

மயிலாடுதுறை அரசாங்க பதிவுகளில் பல ஆண்டுகளாக மாயவரம் என்றே இருந்துள்ளது. பின்பு இவ்வூர், “மயிலாடுதுறை” என்று எம். ஜி. ஆர் ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. “ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது” என்ற சிறப்பை பெற்றுள்ள இந்நகரம், விவசாயம், மீன்பிடி என இரு வேறு தொழில் வளங்களை கொண்டுள்ள ஒரு சிறப்பு மாவட்டமாகும். ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

மயிலாடுதுறையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (ஜூலை 9) புதன்கிழமை காலை 11:00 மணிக்கு நாகை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ரோணிக்ராஜ் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது மின்சாரம் தொடர்பான குறைகளை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்

error: Content is protected !!