News July 7, 2025
டிரம்ப்பின் மிரட்டலால் குறைந்த தங்கம் விலை

பிரிக்ஸ் நாடுகள் மீது 10% வரிவிதிக்கப்படும் என்று டிரம்ப் இன்று மிரட்டல் விடுத்த உடனேயே, சர்வதேச சந்தையில் தங்கம் விலை 0.9% ($3,306/அவுன்ஸ்) அளவுக்கு சரிய, டாலர் மதிப்பு சற்று உயர்ந்தது. வரி தொடர்பாக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், நல்ல முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் சந்தையில் முதலீடு அதிகரித்து, தங்கம் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கலாம்.
Similar News
News September 9, 2025
தீண்டாமை சுவர் அகற்ற ஆட்சியர், எஸ்.பி-யிடம் மனு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள கோவில்பத்து என்கிற கிராமத்தில் பட்டியலின சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியை மறைத்து எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரை உடனடியாக அகற்றக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் புகார் மனு இன்று அளிக்கப்பட்டது.
News September 9, 2025
தோனியின் ஒன் லைன் மந்திரம் இதுதான்

சர்வதேச போட்டிகளில் இருந்து எப்போதோ ஓய்வு பெற்றாலும், தோனியின் விளையாட்டு நுட்பங்கள் இன்றுவரை பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், CSK வீரர் நூர் அகமது தோனி பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். ‘சூழ்நிலையை அறிந்துகொண்டு, அதற்கு தேவையானதைச் செய்’ என்றே தோனி அறிவுறுத்துவார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், IPL-ல் ஆட்ட நாயகன் விருது வென்றதை விட MSD-ன் கீழ் விளையாடியதே சிறந்தது என்றார்.
News September 9, 2025
விலை குறைப்பு.. அரசு புதிய அறிவிப்பு

GST குறைப்பால் கார், டூ வீலர் உள்ளிட்டவை எவ்வளவு விலை குறைகிறது என கடைகளின் முன் விலை பட்டியலை விளம்பரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. PM மோடியின் போட்டோவுடன் இந்த விளம்பரங்கள் இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. விலை குறித்து மக்கள் அறிய வேண்டும் என்ற நல்ல நோக்கம் இருந்தாலும், PM மோடியின் படம் இருக்க வேண்டும் என்பது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?