News July 7, 2025
கல்யாண பாக்கியம் தரும் பேளூர் கோயில்!

சேலம் மாவட்டம் பேளூரில் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கி.பி.12ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. மூலவர் தான்தோன்றீஸ்வரர் (சிவன்), இறைவி தர்மசம்வர்த்தினி என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் கல்யாண விநாயகருக்கு மாலை, தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து மாலையை விநாயகர் கழுத்தில் போட்டால் கல்யாண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE பண்ணுங்க!
Similar News
News September 15, 2025
சேலம் மாவட்டத்தின் அறிய படாத தகவல்கள்

சேலம் மாவட்டம் இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் 1792 ஏப்ரல் 4ஆம் தேதி உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் ஆகும். இளம்பிள்ளை, இரும்பு ஆலை போன்ற பகுதிகளில் இரும்பு, ஜவுளி, வேளாண்மை வளங்கள் உற்பத்தி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சேலம் தனி அங்கம் வகிக்கிறது. மேலும் தமிழகத்திற்கு எடப்பாடி கே.பழனிசாமி உட்பட 3 முதல்வர்களை கொடுத்த ஊராகும். உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை COMMENT பண்ணுங்க!
News September 15, 2025
சேலம்: DRIVING தெரிந்தால்! அரசு வேலை

சேலம் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 15, 2025
சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தை திருமணம் குறித்து பொதுமக்களுக்கு கருத்துரை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில், நாட்டிலேயே குழந்தைகள் திருமணம் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பெண்களுக்கு திருமண வயது 18 என அரசு நிர்ணயித்துள்ளது. இருப்பினும் சிலர் 18 வயதிற்கு கீழ் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். எனவே குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.