News July 7, 2025
கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் காப்பீடு செய்ய கடைசி நாள் 31.7.2025 மற்றும் இதர காரீப் பருவ பயிர்களான மணிலா, கம்பு, மற்றும் எள் பயிர்கள் பிர்கா அளவிலும் விவசாயிகள் பதிவு செய்ய கடைசி நாள் 16.8.2025 ஆகும். எனவே, கடலூர் மாவட்ட விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News July 8, 2025
கடலூர் அருகே தந்தை திட்டியதால் மாணவன் தற்கொலை

நடுவீரப்பட்டு அருகே சிலம்பிநாதன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் பாலகிருஷ்ணன் (20). இவர் பண்ருட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாணவன் சரிவர கல்லூரி செல்லாத காரணத்தால், தட்சிணாமூர்த்தி மாணவனை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் இருந்த தோப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
News July 8, 2025
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 07) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 7, 2025
கடலூர்: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் கடலூர் உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <