News July 7, 2025
பெரிய மாற்றமின்றி முடிவடைந்த பங்குச்சந்தை

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை பெரிய மாற்றமின்றி முடிவடைந்துள்ளது. அதன்படி சென்செக்ஸ் 9.61 புள்ளிகள் உயர்ந்து 83,442.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி 0.30 புள்ளிகள் உயர்ந்து 25,461.30 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிந்துள்ளது. பெரிய ஏற்றத்தாழ்வு இன்றி பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவுபெற்றுள்ளது.
Similar News
News July 8, 2025
கில்லிடமிருந்து இங்கி., வீரர் கற்க வேண்டும்: வாகன்

தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி, இங்கி., அணிக்காக விளையாடுவதே ’அதிர்ஷ்டம்’ என விமர்சித்துள்ளார் மைக்கல் வாகன். 56 போட்டிகளில் 31 தான் கிராவ்லியின் சராசரி, சுப்மன் கில் இத்தொடருக்கு வரும்போது 35 என்ற சராசரியில் இருந்தார், தற்போது 42-ஆக உயர்ந்துள்ளது. முதலில் தற்காப்பில் கவனம் செலுத்தி, பின்னர் மோசமான பந்துகளை தாக்கினார். இதனை கிராவ்லி கில்லிடமிருந்து கற்க வேண்டுமென்றார்.
News July 8, 2025
திருப்புவனம் போல் மற்றுமொரு தாக்குதல் நடத்திய போலீஸ்

திருப்புவனம் அஜித் மீது போலீஸ் தாக்குதல் சம்பவம் இன்னும் தணியாத நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. கோவில் இடத்தில் வீடு கட்டுவதற்கு பொன்ராஜ் என்பவர் ஈடுபட்டுள்ளார். இதனை தங்கபாண்டி என்பவர் எதிர்த்துள்ளார். விவகாரம் காவல் நிலையம் சென்றதால், வேடசந்தூர் போலீசார் தங்கப்பாண்டி வீட்டிற்கே சென்று அவருடைய மனைவி, மகனை கடுமையாக தாக்கியுள்ளார்கள்.
News July 8, 2025
அம்பேத்கர் பொன்மொழிகள்

*நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை. * ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின். *சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.