News April 5, 2024
சென்னை அணி பேட்டிங்

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி இதுவரை 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று 7வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் யார் ஜெயிப்பாங்க?
Similar News
News February 9, 2026
தவெகவுடன் கூட்டணி பேசவில்லை: பாஜக

தவெகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை என்று மத்திய இணை அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் இணை பொறுப்பாளருமான முரளிதர் மோஹோல் தெரிவித்துள்ளார். NDA கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடக்கிறது. விரைவில் தீர்வு எட்டப்பட்டு, யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து அறிவிக்கப்படும் எனக் கூறிய அவர், திமுக ஆட்சியை வீழ்த்தி NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என்றார்.
News February 9, 2026
சற்றுமுன்: தங்கம் விலை ஒரே அடியாக மாறியது

சர்வதேச சந்தை எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களில் (ஞாயிற்றுக்கிழமையை தவிர) சவரனுக்கு ₹3,840 குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) தங்கம் விலை $65 உயர்ந்து $5,033-ஆக உள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால், நம்மூரிலும் தங்கம் விலை இன்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News February 9, 2026
விடாப்பிடியாக இருக்கும் காங்., கறார் காட்டும் திமுக

தொகுதிப் பங்கீடு குறித்து பேச 36 நாட்களாக காங்., குழு காத்திருக்கும் நிலையில், திமுகவோ இன்னும் குழுவை அமைக்கவில்லை. இதற்கு காரணம் காங்., 41 தொகுதிகள் வேண்டும் என விடாப்பிடியாக இருப்பதுதான் என கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு அதிக சீட் கொடுத்தால் கூட்டணியில் பிரச்னை வந்துவிடும். சீட் எண்ணிக்கையை குறைத்தால் மட்டுமே தொகுதிப்பங்கீடு குறித்து பேச முடியும் என்பதில் திமுகவும் விடாப்பிடியாக இருக்கிறதாம்.


