News July 7, 2025

அரியலூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

தற்போதைய நவீன காலத்தில் அரசின் நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800-425-6000. ஷேர் பண்ணுங்க!

Similar News

News July 8, 2025

அரியலூர்: இன்றைய ரோந்து காவலர்கள் விவரம்.

image

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே (ஜூலை 7) அரியலூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரத்தை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தங்களது பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.

News July 7, 2025

408 மனுக்கள் பெற்ற அரியலூர் ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது இக்கூட்டத்தில் உதவித்தொகை இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய 408 மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News July 7, 2025

அரியலூர்: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் திருச்சி உட்டபட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <>இங்கே கிளிக் செய்து<<>> ஜூலை 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!