News July 7, 2025

விழுப்புரம் இளைஞர்களே இந்திய கடற்படையில் நல்ல வேலை!

image

இந்திய கடற்படையில் நர்ஸ், சார்ஜ்மேன், பார்மசிஸ்ட், கேமராமேன், ஸ்டோர் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th முதல் பொறியியல் வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000- 1,42,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். விழுப்புரத்தில் உள்ள உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News July 8, 2025

மு.அமைச்சரை அரசு பள்ளி ஆசிரியர்கள் சந்தித்து வாழ்த்து

image

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, இன்று ஜூலை 7ஆம் தேதி, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சருமான முனைவர் க. பொன்முடி எம்.எல்.ஏ.வை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

News July 7, 2025

விழுப்புரம் எம்எல்ஏ – வை சந்தித்த அரசு பள்ளி ஆசிரியர்கள்

image

2024-2025 ஆம் ஆண்டிற்கான பேராசிரியர் அன்பழகன் விருது, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று ஜூலை 7 அன்று பள்ளித் தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News July 7, 2025

விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம்

image

வரும் ஜூலை 9, 2025 அன்று, நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாதர் சங்கம், மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. புதன்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் தவிச மாநில தலைவர் ரவீந்திரன் தலைமையில் இப்போராட்டம் நடைபெறும்.

error: Content is protected !!