News July 7, 2025

சென்னை விமான நிலையத்தில் +2 முடித்தால் போதும் வேலை ரெடி

image

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைட் சர்வீசஸ் நிறுவனத்தில் உதவியாளர், பாதுகாப்பு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 393 பணியிடங்கள் உள்ளன. +2, டிகிரி படித்தவர்கள் இதற்கு இன்றைக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ரூ.21,500 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News July 8, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் 120 முகாம்கள்

image

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், உங்களுடன்ஸ்டாலின்” என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முதற்கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை 120 முகாம்கள் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் பிரதாப் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 7, 2025

பூட்டை உடைத்து ரூ.20,000 திருட்டு

image

எல்லாபுரம் ஒன்றியம், பனப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி, 47. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை வீடு திரும்பிய சீதாலட்சுமி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த புது துணிகள், 20,000 ரூபாய் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News July 7, 2025

திருவள்ளூர் மக்களே உங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

திருவள்ளூர் காவல் துறை தனது சமூக வலைத்தளத்தில் வேலை வாய்ப்பு மோசடிகள் பொதுவாக உண்மையான வேலை வாய்ப்புகளைப் போல தோன்றும், ஆனால் அவை பணம், மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடி மோசடிகளில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் இது போன்ற மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!