News July 7, 2025
குமரியில் இடைநிலை ஆசிரியர் இடம் மாறுதல் கலந்தாய்வு

குமரி மாவட்டத்தில் அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு கடந்த மூன்றாம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 11-ம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. இடம் மாறுதல் கூறி விண்ணப்பித்தவர்கள் வரிசைப்படி கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
குமரி மாவட்ட அணைகளை பற்றி தெரிந்து கொள்வோம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது உள்ள மொத்த அணைகள் விவரம் பின்வருமாறு
1)அப்பர்கோதையார் அணை
2)சின்ன குட்டியார் அணை
3)குட்டியார் அணை
4)லோயர்கோதையார் அணை
5)பேச்சிபாறை அணை
6)சிற்றார்-1அணை
7)சிற்றார்-2அணை
8)பெருஞ்சாணி அணை
9)புத்தன்அணை
10)மாம்பழத்தாறு அணை
11)முக்கடல் அணை
12) பொய்கை அணை
இதில் பேச்சிபாறை திருவிதாங்கோடு மன்னர் காலத்தில் கட்டப்பட்டது 100 ஆண்டுகளை கடந்த அணை ஆகும்.
News July 8, 2025
உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <
News July 8, 2025
குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை.8) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை 42.30 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை 71.25 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை 13.35 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை 13.45 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 471 கனஅடி, பெருஞ்சாணிக்கு 129 கன அடி நீர்வரத்தும் உள்ளது.