News July 7, 2025

சேலத்தில் 8.94 லட்சம் பேருக்கு சத்துமாவு விநியோகம்

image

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில், 8.94 லட்சம் குழந்தைகளுக்கு 2205 டன் சத்துமாவு விநியோகிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்

Similar News

News July 7, 2025

சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

image

சேலம் மாவட்ட விவசாயிகள் விளைபொருட்களை விற்க ஒவ்வொரு வட்டாரத்திலும் பொது சேகரிப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையோ அல்லது சேலம் உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள சேலம் விற்பனைக் குழு தலைமை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

News July 7, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் மாநகரில் இன்று (ஜூலை 07) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News July 7, 2025

கல்யாண பாக்கியம் தரும் பேளூர் கோயில்!

image

சேலம் மாவட்டம் பேளூரில் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கி.பி.12ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. மூலவர் தான்தோன்றீஸ்வரர் (சிவன்), இறைவி தர்மசம்வர்த்தினி என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் கல்யாண விநாயகருக்கு மாலை, தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து மாலையை விநாயகர் கழுத்தில் போட்டால் கல்யாண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!