News July 7, 2025
ஹாஸ்டலுக்கு நேரில் சென்று பாருங்கள்.. விளாசிய L.முருகன்

தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘<<16973280>>சமூகநீதி<<>> விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், நீங்கள் அங்கு எப்போதாவது சென்றுள்ளீர்களா? என்று L.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, SC & ST ஹாஸ்டல்கள் உங்கள் தோல்வியுற்ற அரசின் கீழ் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News July 7, 2025
மீண்டும் மோதிக்கொள்ளும் அன்புமணி – ராமதாஸ்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் அன்புமணி தலைமையில் நாளை பாமக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் தலைமையில் நாளை செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதற்கு போட்டியாக இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் மீண்டும் வலுப்பெறுகிறது. மறுபுறம் நிர்வாகிகள் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர்.
News July 7, 2025
PLEASE இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்

இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்: சோர்வு -திடீரென அதிக களைப்பாகவும் சோர்வாகவும் உணர்வது *காரணமின்றி தலைச்சுற்றல் & மயக்கம் *தூங்குவதில் சிரமம் -படுக்கையில் நேராகப் படுத்திருக்கும்போது தூங்குவதற்கு கடினமாக உணர்வது *கால் வீக்கம் *உடல் எடை வேகமாக அதிகரித்தல் *தொடர் சளி & இருமல். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
News July 7, 2025
குஜராத்தில் பிரம்மாண்ட விண்வெளி மையம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ₹10,000 கோடி செலவில் குஜராத்தில் பெரிய விண்வெளி மையத்தை அமைக்கவுள்ளது. குஜராத் மாநிலம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால், ராக்கெட் ஏவுதலின் போது எரிபொருள் நுகர்வு குறைவாக இருக்கும் என்பதால் இங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான்-5, ககன்யான், சுக்கிரன் திட்டம் போன்றவற்றுக்கு இந்த மையம் முக்கியமானதாக இருக்கும்.