News July 7, 2025
காண்டம் விளம்பரத்தில் பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே, முன்னணி காண்டம் பிராண்டின் விளம்பரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இதற்கு மறுத்த அவர், பின்னர் அதிக சம்பளம் காரணமாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். இதன் மூலம் ஒரு திரைப்பட முன்னணி நடிகை, காண்டம் விளம்பரத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. இவர் நடித்துள்ள கூலி & ஜனநாயகன் படம் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளது. மேலும், காஞ்சனா & தனுஷின் படத்திலும் அவர் நடிக்கிறார்.
Similar News
News July 7, 2025
ரெஸ்ட் எடுங்க பாஸ்…ஆனால்?

ஓய்வு நேரம் குறைந்தால், மன அழுத்தம் அதிகரிக்கும் ஆபத்து அதிகம் என அமெரிக்காவின் ஓஹியோ பல்கலை., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைந்த ஓய்வு எடுப்பவர்கள், குறைந்த அளவிலேயே மகிழ்ச்சியை அனுபவித்து வருகின்றனராம். அதேநேரம், அளவுக்கு அதிகமாக ஓய்வு எடுப்பதும் உடல், மன நலத்தை பாதிக்குமாம். அதீத ஓய்வால் பிபி, மன அழுத்தம், தூக்கமின்மை, அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஆகவே அவசியம் ஓய்வெடுங்க.. அளவாக!
News July 7, 2025
பதவி நீக்கம்.. சில மணி நேரத்தில் அமைச்சர் தற்கொலை

ரஷ்யாவில் அதிபர் புதினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் சில மணிநேரங்களிலேயே தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைனின் தாக்குதல் காரணமாக ரஷ்யாவில் விமான சேவை பாதிக்கப்பட்டதால் அந்த துறையின் அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட்டை புதின் பதவி நீக்கம் செய்தார். இதனையடுத்து, காருக்குள் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தன்னைத்தானே சுட்டு ரோமன் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
News July 7, 2025
மீண்டும் போர் மூளுமா?

இஸ்ரேல் – ஈரான் போர் சற்றே ஓய்ந்துள்ள நிலையில், நேற்றிரவு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஏமனின் ஹூதி கிளர்ச்சிப் படை. இதையடுத்து ஏமனின் துறைமுகங்கள், மின்னுற்பத்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியது. இதற்கு பதிலடியாக, மீண்டும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஹூதி நடத்தியுள்ளது. காஸாவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், மீண்டும் மோதல்கள் நடப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.