News July 7, 2025
ராணிப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறி விலை நிலவரம்

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் இன்று (ஜூலை7) காய்கறி விலை (1kg) தக்காளி ரூ.25-27, உருளை ரூ.28-32, சின்ன வெங்காயம் ரூ.55-60, பெரிய வெங்காயம் ரூ.25-27, கத்திரிக்காய் ரூ.35-40, வெண்டை ரூ.40, முருங்கை ரூ.45-50, சுரக்காய் ரூ.15-20, புடலங்காய் ரூ.25, பாகற்காய் ரூ.50-60, பீர்கங்காய் ரூ.25-35, தேங்காய் ரூ.25-30, முள்ளங்கி ரூ.25-30, பீன்ஸ் ரூ.55-80, அவரை ரூ.55, கேரட் ரூ.40-60 என விற்பனையாகிறது
Similar News
News July 7, 2025
வெற்றி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் இன்று (ஜூலை-7) வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, லாட்டரி மற்றும் வெற்றி அழைப்புகள் (Prize Winning Call) போன்றவற்றை உண்மை என நம்பி பணம் கொடுக்கும் மக்கள் மோசடிக்கு ஆளாகக்கூடும். இந்த வகை கைபேசி அழைப்புகள் மூலம் பணம் வற்புறுத்தும் மோசடி அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சைபர் மோசடியில் சிக்காதீர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
News July 7, 2025
மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்ற ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா, மாற்றுத்திறனாளிகள் வழங்கிய மனுக்களை பெற்று அவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். மனுக்களில் கூறப்பட்ட பிரச்னைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
News July 7, 2025
சோளிங்கரில் 24 மணி நேர மோட்டார் சைக்கிள் ரோந்து பணி

சோளிங்கர் பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களை தடுக்க, 24 மணி நேரம் ரோந்து பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் தலைமை தாங்கினார். 24 மணி நேர மோட்டார்சைக்கிள் ரோந்து பணியை தாசில்தார் செல்வி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரோந்து பணி காவலர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.