News July 7, 2025

ராணிப்பேட்டையில் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம்

image

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<>மருத்துவமனை பட்டியல்<<>>) மேலும் தகவல்களுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட அதிகாரிகள் (7373004549) அல்லது உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16974389>>தொடர்ச்சி<<>>

Similar News

News July 7, 2025

வெற்றி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் இன்று (ஜூலை-7) வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, லாட்டரி மற்றும் வெற்றி அழைப்புகள் (Prize Winning Call) போன்றவற்றை உண்மை என நம்பி பணம் கொடுக்கும் மக்கள் மோசடிக்கு ஆளாகக்கூடும். இந்த வகை கைபேசி அழைப்புகள் மூலம் பணம் வற்புறுத்தும் மோசடி அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சைபர் மோசடியில் சிக்காதீர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

News July 7, 2025

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா, மாற்றுத்திறனாளிகள் வழங்கிய மனுக்களை பெற்று அவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். மனுக்களில் கூறப்பட்ட பிரச்னைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

News July 7, 2025

சோளிங்கரில் 24 மணி நேர மோட்டார் சைக்கிள் ரோந்து பணி

image

சோளிங்கர் பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களை தடுக்க, 24 மணி நேரம் ரோந்து பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் தலைமை தாங்கினார். 24 மணி நேர மோட்டார்சைக்கிள் ரோந்து பணியை தாசில்தார் செல்வி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரோந்து பணி காவலர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!