News July 7, 2025
கிராம உதவியாளர்: விண்ணப்பிக்க தகுதி என்ன?

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News July 7, 2025
கோவை: கட்சி நிர்வாகிகளிடம் பிக் பாக்கெட்

மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் இபிஎஸ் இன்று சாமி தரிசனத்திற்கு பின்னர், விவசாயிகள், நெசவாளர்கள் இடையே கலந்துரையாடினார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதிமுக காரமடை ஒன்றிய பொருளாளர் தங்கராஜ் என்பவரிடம் ரூ.1 லட்சம், நெல்லித்துறை ஆனந்த் என்பவரிடம் ரூ.1 லட்சம் என ரூ.2 லட்சத்தை மர்ம நபர், பிக் பாக்கெட் அடித்து சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News July 7, 2025
கோவையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு!

கோவையில் 6 – 18 வயது வரையிலான பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான கணக்கெடுப்புப் பணி ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த புதிய கணக்கெடுப்பு, மேலும் பல குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News July 7, 2025
கோவை விவசாயிகளுக்கு அடையாள அட்டை முகாம்கள்

கோவை மாவட்டத்தில், உழவர் சந்தைகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முகாம்கள் நடத்தி, அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, உட்பட 8 சந்தைகளில் வாரந்தோறும் சனிக்கிழமை முகாம்கள் நடத்தப்படுகின்றன. அடையாள அட்டை பெற ஆர்வமுள்ள விவசாயிகள் அருகிலுள்ள உழவர் சந்தைகளை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் அதிகாரி நேற்று தெரிவித்துள்ளார்