News July 7, 2025
நாகை: சொந்த ஊரில் அரசு வேலை (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 68 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க! (<<16974210>>பாகம்-2<<>>)
Similar News
News July 7, 2025
நாகை: மனக்கவலைகளை தீர்க்கும் மனத்துணைநாதர்!

நாகை மாவட்டம் வலிவலம் கிராமத்தில் மனத்துணைநாதர் கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான மனத்துணைநாதரை வழிபட்டால் பெயருக்கு ஏற்றார் போலவே நம் வாழ்வில் உள்ள சகல மனக்கவலைகளும், மனதில் ஏற்பட்டு இருக்கும் தேவையற்ற கலக்கங்களும் பறந்தோடும். மேலும் இருதய சம்மந்தமான நோய்கள் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.!
News July 7, 2025
நாகநாத சுவாமி கோயிலில் தேரோட்ட விழா

நாகை மாவட்டம் நாகூரில் நாகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 29ம் ஆண்டு ஆனி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில், திரளான பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள கோவில் நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News July 7, 2025
வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம்!

நாகை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற கிறிஸ்தவ பேராலயமான வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் புனித கார்மேல் அன்னை திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அன்னையின் திருக்கொடி பவனியானது கடற்கரைச் சாலை வழியாக வந்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. இதில், தமிழ் நாடு மட்டுமின்றி வெளிமாநில பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.