News July 7, 2025

கடலூர்: சொந்த ஊரில் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை (1/2)

image

தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் ’66’ காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க! <<16974144>>(பாகம்-2)<<>>

Similar News

News July 8, 2025

கடலூர்: ரயில்வே கேட் கீப்பர் பணியிடை நீக்கம்

image

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தை நேரில் கண்டவர்கள் ரயில்வே கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதால் தான் விபத்து நடந்ததாக கூறி, தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக வடமாநிலத்தை சேர்ந்த கேட் கீப்பரை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News July 8, 2025

கடலூர் அருகே தந்தை திட்டியதால் மாணவன் தற்கொலை

image

நடுவீரப்பட்டு அருகே சிலம்பிநாதன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் பாலகிருஷ்ணன் (20). இவர் பண்ருட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாணவன் சரிவர கல்லூரி செல்லாத காரணத்தால், தட்சிணாமூர்த்தி மாணவனை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் இருந்த தோப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

News July 8, 2025

கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 07) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!