News July 7, 2025
திருப்பூர்: மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

திருப்பூர்: அவினாசி – மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரி
யம் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் 9ஆம் தேதி காலை 11 மணி முதல் 12.30 மணி வரை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருப்பூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் பங்கேற்று மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவர்த்தி செய்கிறார். இதில், மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
Similar News
News July 8, 2025
ரிதன்யா கணவர் ஜாமின் மனு தள்ளுபடி

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான ஆடியோ வெளியான நிலையில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில்ம் திருப்பூர் மாவட்டம் முதன்மை நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
News July 7, 2025
திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.
News July 7, 2025
திருப்பூர் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

திருப்பூர்: ரயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவதால் எர்ணாகுளம் – டாடாநகர் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்.18190) வருகிற 8 மற்றும் 9ஆம் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் – கோவை – இருகூர் வழியாக இயக்கப்படும். ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ்(13352) வருகிற 8 மற்றும் 9ஆம் தேதிகளில் ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டுகிறது.