News July 7, 2025

ராணிப்பேட்டை பள்ளிகளுக்கு இன்று (ஜூன் 7) விடுமுறை !

image

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று (திங்கட்கிழமை ) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சந்திரகாலா உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, இன்று (ஜூலை 7) சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News July 7, 2025

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா, மாற்றுத்திறனாளிகள் வழங்கிய மனுக்களை பெற்று அவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். மனுக்களில் கூறப்பட்ட பிரச்னைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

News July 7, 2025

சோளிங்கரில் 24 மணி நேர மோட்டார் சைக்கிள் ரோந்து பணி

image

சோளிங்கர் பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களை தடுக்க, 24 மணி நேரம் ரோந்து பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் தலைமை தாங்கினார். 24 மணி நேர மோட்டார்சைக்கிள் ரோந்து பணியை தாசில்தார் செல்வி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரோந்து பணி காவலர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News July 7, 2025

இந்திய கடற்படையில் வேலை ரெடி. உடனே அப்ளை பண்ணுங்க

image

இந்திய கடற்படையில் உள்ள குரூப்.பி மற்றும் குரூப்-சி பிரிவில் உள்ள சார்ஜ்மேன், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது 18 முதல் 45 வரை இருக்கலாம். 10th முதல் பொறியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 18,000- 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள்<> இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!