News July 7, 2025

”ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களை பழிவாங்குவேன்”

image

ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களை பழிவாங்குவேன் என ரீல்ஸ் வெளியிட்டவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5ம் தேதி, BSP கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தினத்தில் அவரது சிலை திருவள்ளூரில் திறக்கப்பட்டது. அங்கு இளைஞர் ஒருவர், “ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களை பழிவாங்குவேன்” எனும் வசனங்களுடன் ரீல்ஸ் வெளியிட்டிருந்தார். அவரது ஐடி-ஐ வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News July 7, 2025

திருவள்ளூர் மக்களே உங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

திருவள்ளூர் காவல் துறை தனது சமூக வலைத்தளத்தில் வேலை வாய்ப்பு மோசடிகள் பொதுவாக உண்மையான வேலை வாய்ப்புகளைப் போல தோன்றும், ஆனால் அவை பணம், மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடி மோசடிகளில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் இது போன்ற மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

திருவள்ளூரில் பொறியியல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

image

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியருக்கான திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News July 7, 2025

திருவள்ளூரில் மகளிருக்கான தொழில் விழிப்புணர்வு

image

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஜூலை 10ம் தேதி நடைபெறும் மகளிருக்கான தொழில் நெறிவழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மகளிர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!