News July 7, 2025
மருத்துவ மாணவி கழிவறையில் சடலமாக மீட்பு

கோவை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டியை சேர்ந்த பவபூரணி, 29 முதுகலை மயக்க மருந்தியல் படித்து வந்தார். இவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்கை பிரிவில், 5ம் தேதி இரவு பணியில் இருந்தார். நேற்று காலை அவர். மருத்துவமனை கழிப்பறையில் சடலமாக கிடந்ததை பார்த்த ஊழியர்கள், பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
Similar News
News July 7, 2025
நாமக்கல் அருகே 2 கார்கள் மோதி விபத்து!

நாமக்கல்: குமாரமங்கலம் அருகே, இராசிபுரம் மற்றும் நாமக்கல் பிரிவு ரோடு, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் இன்று மாலை 4 மணியளவில், 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கு தலை மற்றும் கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த கரட்டுப்பாளையம் போலீசார், அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News July 7, 2025
10th தேர்ச்சி பெற்றால் உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 68 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974687>>தொடர்ச்சி<<>> (1\2)
News July 7, 2025
கிராம உதவியாளர்: விண்ணப்பிக்க தகுதி என்ன?

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!